கடலை மா பர்ஃபி (Besan/ Gram Flour Barfi)

கடலை மா பர்ஃபி (Besan/ Gram Flour Barfi)
தேவையான பொருட்கள்:
தேங்காய்த்துருவல் - 1 கப் 
கடலை மா - 1/4 கப் 
சீனி - 1 கப் 
ஏலப்பொடி - 1/4 கரண்டி 
தண்ணீர் - தேவையானளவு
நெய் - சிறிதளவு  
பிஸ்தா - சிறிதளவு (விரும்பினால் சேர்க்கலாம்)

செய்முறை :
சீனியுடன் தண்ணீர் சேர்த்து லேசான கம்பிப்பதத்தில் பாகு காய்ச்சவும். தேங்காய் துருவலை லேசாக அரைத்து பாகில் சேர்க்கவும். பின் கடலை மாவைத் தூவிக் கிளறவும். கலவை சுருள் சுருளாக வரும்போது அடுப்பிலிருந்து இறக்கவும். ஒரு நெய் தடவிய தட்டில் இதை ஊற்றி சமப்படுத்தி, அதன் மேல் பிஸ்தாவை பொடியாக நறுக்கி தூவவும், சற்றே ஆறியதும், சம சதுரங்களாக வெட்டி மீண்டும் ஆறவிடவும். நன்கு ஆறியதும் பர்ஃபி  தயார்.

 

Comments