சுரைக்காய் அடை (Bottle Gourd / Surakkai Adai)
தேவையான பொருட்கள் :
புழுங்கல் அரிசி - 1 கப்
கடலைப்பருப்பு - 3/4 கப்
துவரம் பருப்பு - 1/4 கப்
சுரைக்காய் - 1kg
சின்ன வெங்காயம் - 1கப் (நறுக்கியது)
துருவிய தேங்காய் - 1/4 கப்
மல்லித்தழை - 1/4 கப்
காய்ந்த மிளகாய் - 8
பெருங்காயத்தூள் - 1/2 தேக்கரண்டி
உப்பு - தேவையானளவு
எண்ணெய் - தேவையானளவு
தாளிக்க :
எண்ணெய் - 2 தேக்கரண்டி
கடுகு, உழுந்து - 1 1/2 தேக்கரண்டி
கறிவேப்பிலை - சிறிதளவு
செய்முறை:
அரிசியை ஒரு மணிநேரம் ஊறவைக்கவும். கடலைப்பருப்பையும், துவரம் பருப்பையும், ஒன்றாக ஊறவைக்கவும். சுரைக்காயை தோல், விதையை நீக்கி பொடியாக நறுக்கவும். ஊறிய அரிசி, காய்ந்த மிளகாய், நறுக்கிய சுரைக்காய் மூன்றையும் சேர்த்து சற்று கரகரப்பாக அரைத்தெடுக்கவும். பின் பருப்பு சேர்த்து அரைத்தெடுக்கவும். இதனுடன் தாளிப்பு பொருட்களை தாளித்து சேர்க்கவும். வெங்காயம், தேங்காய்த்துருவல், மல்லித்தழை, பெருங்காயத்தூள், உப்பையும் கலவையுடன் சேர்த்து நன்கு கலக்கவும். தோசைக்கல்லை காயவைத்து மாவை சிறுசிறு அடைகளாக சற்று கனமாக ஊற்றி, சுற்றிலும் எண்ணெய் விட்டு நன்றாக வேக விட்டு எடுக்கவும்.
Comments
Post a Comment