கடலைக் குழம்பு (Chickpea Curry)

கடலைக் குழம்பு (Chickpea Curry)
தேவையான பொருட்கள் :
கொண்டைக்கடலை - 500g 
செத்தல் மிளகாய் - 10
மல்லி - 1/2 கப் 
பெருஞ்சீரகம் - 1 தேக்கரண்டி 
கறுவாப்பட்டை - 2 துண்டு 
கராம்பு - 5
ஏலக்காய் - 5
தேங்காய் - 1 கப் (சிறிதாக நறுக்கிய துண்டுகள்)
எண்ணெய் - 1/4 கப் 
கடுகு - 1 தேக்கரண்டி
சிறிய வெங்காயம் - 1/4 கப் (நறுக்கியது)
கறிவேப்பிலை - தேவையானளவு
உப்பு -  தேவையானளவு

செய்முறை :
கடலையை முதல்நாள் இரவே தண்ணீரில் ஊற விடவும். காலையில் நன்கு கழுவி, அதில் தேங்கைத் துண்டுகளையும் சேர்த்து தேவைக்கேற்ப நீர் விட்டு உப்பு சேர்த்து வேக வைக்கவும். தாச்சியில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் விட்டு சூடானதும் செத்தல் மிளகாய், மல்லி, பெருஞ்சீரகம், கறுவாப்பட்டை, கராம்பு, ஏலக்காய் ஆகியவைகளை இட்டு வறுக்கவும். பின் வறுத்தவைகளை அரைத்தெடுக்கவும். பின் மீதமிருக்கும் எண்ணெய்யில் கடுகு, சிறிய வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும். பின்னர் வேகவைத்த கடலைக்கலவையையும், வறுத்து அரைத்த கலவையையும் தாளித்த பொருட்களுடன் சேர்த்து கிளறவும், தேவைப்படின் மீண்டும் உப்பு சேர்த்து கொதிக்கவிடவும். கடலைக் குழம்பு தயார்.

 

Comments