சாக்லேட் ஐஸ்கிரீம் (Chocolate Ice Cream)

சாக்லேட் ஐஸ்கிரீம் (Chocolate Ice Cream)
தேவையான பொருட்கள் :
டின் பால் (Condensed Milk) - சிறிய டின் 
குளிர்ந்த பால் - 1 1/2 கப் 
விப்ட் கிரீம் - 1 1/2 கப் 
கோகோ பவுடர் - 5 தேக்கரண்டி 
வெனிலா எசென்ஸ் - 1 தேக்கரண்டி 

செய்முறை :
குளிர்ந்த பாலுடன் கோகோ பௌடரை நன்கு கலந்துக்கொள்ளவும். அத்துடன் டின் பால், வெனிலா எசென்ஸ் என்பவற்றையும் கலந்துக்கொள்ளவும். விப்ட் கிரீமை நன்றாக அடித்து ஏற்கனவே கலந்து வைத்த கலவையுடன் சேர்க்கவும். இதனை குளிரூட்டியில் பாதி இறுகும் வரை வைத்தெடுக்கவும். பின் பாதி இறுகிய கலவையை நன்றாக மென்மையாகும் வரை அடித்தெடுக்கவும். பின் மீண்டும் குளிரூட்டியில் இறுகும் வரை குளிர விடவும்.


Comments