மில்க்மெயிட் ஐஸ்கிரீம் - Milkmaid Ice cream
மில்க்மெய்ட் (Condensed Milk) - 1 Cup
லக்ஸ்பிறே (Milk Powder) - 3 மேசை கரண்டி
சீனி - 250g
வெனிலா எசென்ஸ் - 2 துளிகள்
செய்முறை :
மில்க்மெய்ட் பாலுடன் 1/2 கப் நீர் சேர்த்து இறுக்க காய்ச்சவும். பின் காய்ச்சிய பாலில் அரைவாசியை வேறாக எடுத்து அதனுடன் லக்ஸ்பிறே மா, சீனி சேர்த்து நன்றாக கரையும் வரை கலக்கவும். பின் எஞ்சிய அரைவாசி பாலை நன்றாக சூடாக்கி எடுத்து கொண்டு, கலவை அடங்கிய கரைசலுடன் இதனை சேர்த்து, மேலும் ஒரு முறை அடுப்பில் வைத்து இறுகும் வரை காய்ச்சவும். பின் அடுப்பிலிருந்து இறக்கி ஒரு பாத்திரத்தில் ஊற்றி ஆறவிடவும். ஆறியதும் அதனுடன் வெனிலா எசென்ஸ் சேர்த்து கலக்கவும். பின்பு 30 நிமிடங்கள் குளிர்சாதனப் பெட்டியில் வைத்தெடுத்து பரிமாறவும்.

Comments
Post a Comment