நண்டு குருமா (Crab Kuruma)
தேவையான பொருட்கள்:
நண்டு - 6
சின்ன வெங்காயம் - 100 கிராம்
பச்சைமிளகாய் - 3
தக்காளி - 1 பெரியது
கறிவேப்பிலை - 1 கொத்து
தேங்காய் பால் - 2 கப்
இஞ்சி, பூண்டு விழுது - 2 தேக்கரண்டி
சீரகத்தூள் - 1 தேக்கரண்டி
மிளகுத்தூள் - 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1 தேக்கரண்டி
மல்லித்தூள் - 1 தேக்கரண்டி
கருவாப்பட்டை - 2 துண்டு
கிராம்பு - 4
உப்பு - தேவைனயனளவு
மிளகாய்த்தூள் - 1/2 தேக்கரண்டி
எண்ணெய் - சிறிதளவு
செய்முறை :
நண்டை ஓடு நீக்கி சுத்தம் செய்து துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி அதில் கருவாப்பட்டை, கிராம்பு, சின்ன வெங்காயம், பச்சை மிளகாய் ஆகியவற்றை போட்டு வதக்கவும். வெங்காயம், மற்றும் பச்சை மிளகாய் வதங்கியதும் அதில் இஞ்சி,பூண்டு விழுது, தக்காளி சேர்த்து வதக்கவும். பின்னர் அதில் மிளகாய்த்தூள் சேர்த்து வாசனை வரும் வரை வதக்கவும். பின் நண்டு துண்டுகளை போட்டு கிளறவும். நண்டு நன்கு மசாலாவுடன் ஒன்று சேர்ந்ததும் அதில் தேங்காய்ப் பால் சேர்த்து பிரட்டி விடவும். அதன் பிறகு உப்பு மற்றும் அனைத்து வகையான மசாலாப் பொடிகளையும் சேர்த்துக் கிளறி மிதமான தீயில் வேக விடவும். நண்டு வெந்து, குருமா திரண்டு வந்ததும் கறிவேப்பிலை தூவி இறக்கவும்.
Comments
Post a Comment