தேங்காய் பர்ஃபி (Coconut Burfi)
தேவையான பொருட்கள்:
தேங்காய்த்துருவல் - 2 கப்
சீனி - 2 கப்
தண்ணீர் - 1/2 கப்
ஏலப்பொடி - 1/2 கரண்டி
நெய் - சிறிதளவு
செய்முறை:
சீனியுடன் ஏலப்பொடி, தண்ணீர் சேர்த்து கம்பிப்பதம் வரும்வரை பாகு காய்ச்சவும். தேங்காய்த்துருவலை கரகரப்பாக அரைக்கவும்.
அரைத்ததை பாகில் போட்டுக் கிளறி இறக்கவும். இதை நெய் தடவிய சதுர தட்டில் ஊற்றி சமமாகப் பரப்பி ஆறியவுடன் சதுரத் துண்டுகளாக வெட்டவும்.
Comments
Post a Comment