ப்ளேன் கேக் (Plain Cake)

ப்ளேன் கேக்   (Plain Cake)
தேவையான பொருட்கள் :

டின் பால் / மில்கமைட்  - 400 ml 

பட்டர் - 100g 

கோதுமை மா - 1/4kg 

பேக்கிங் பவுடர் - 1 தேக்கரண்டி (தலைதட்டி)

ஆப்ப சோடா - 1/2 தேக்கரண்டி 

போத்தல் சோடா - 300ml 

வெனிலா எசென்ஸ் - 2 தேக்கரண்டி 

செய்முறை :

கோதுமை மா, ஆப்ப சோடா, பேக்கிங் பவுடர், மூன்றாயும் கலந்து இருமுறை நன்றாக அரியுங்கள். ஒரு பாத்திரத்தில் பட்டர் போட்டு நன்கு அடியுங்கள். அத்துடன் டின் பால் சேர்த்து நன்கு கலந்து எசென்சையும் சேர்த்து கலந்து கொள்ளுங்கள். இதனுடன் அரித்த மாவு ஒரு கை, போத்தல் சோடா கொஞ்சம் என்று மாறி மாறிப் போட்டு நன்கு அடியுங்கள். அடித்த மாவை கரண்டியில் எடுத்து மேலிருந்து விட்டால் தடதடவென ஊற்றும் பதம் வரும்வரை அடிக்கவும். பின் பேக் செய்யவும்.
 

Comments