ஆட்டா மா சப்பாத்தி (Atta Chapati)
தேவையான பொருட்கள் :ஆட்டா மா - 1/4kg
நெய் - 1 அவுன்ஸ்
மா - சிறிதளவு (உருட்டுவதற்கு)
உப்பு - தேவையானளவு
நீர் - தேவையானளவு
செய்முறை :
ஆட்டா மாவை நீரும் உப்பும் சேர்த்து மென்மையாக மாக்கலவையாகப் பிசைந்து எடுத்து, ஈரத்துணியால் 2 மணித்தியாலம் சுற்றிவைக்கவும். பின்பு மாக்கலவையை ஒரே அளவான உருண்டைகளாகப் பிரித்தெடுத்து (தேசிக்காய் அளவான உருண்டை) பலகையில் சிறிது மாவைத்தூவி அதில் இந்த உருண்டையைப் போட்டு பப்படம் போல் உருட்டி எடுக்கவும். பின் அடுப்பில் பாத்திரத்தை வைத்து பாத்திரம் சிறிது சூடேறியதும் எண்ணெய்ச்சீலையால் பாத்திரத்தை தடவி உருட்டிய சப்பாத்தி துண்டை போட்டு அதன் மேல் சிறிது நெய் விடவும். 3 நிமிடம் விட்டு மறுபக்கம் திருப்பி 1/2 நிமிடம் விட்டு இறக்கவும்.
Comments
Post a Comment