எலுமிச்சம்பழச் சாதம் (Lemon Rice)
தேவையான பொருட்கள் :
வேகவைத்த சாதம் - 1 கப்
கறிவேப்பிலை - சிறிதளவு
பச்சை மிளகாய் - 4
எண்ணெய் - 1 மேசைக்கரண்டி
கடுகு - 1 தேக்கரண்டி
கடலைப் பருப்பு - 1 தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு - 2 தேக்கரண்டி
முந்திரிப் பருப்பு - 15 அல்லது நிலக்கடலை ஒரு பிடி
பெருங்காயம் - 1/2 தேக்கரண்டி
உப்பு - தேவைக்கேட்ப
மஞ்சள் பொடி - 1/4 தேக்கரண்டி
எலுமிச்சை - 1 பெரியது
செய்முறை:
வேகவைத்த சாதத்தை ஓர் அகலமான பாத்திரத்தில் இட்டு ஆறவிடவும். ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு தாளித்துக் கொண்டு முந்திரிப் பருப்பையும் போட்டு (நிலக்கடலையானால் கடுகு வெடித்தவுடன் போட்டு சிறிது வறுபட்டவுடன் உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு போடவும். முந்திரிப் பருப்பானால் உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு வறுபட்டவுடன் தான் போடவேண்டும்.) நறுக்கிய பச்சை மிளகாய்களைப் போட்டு, பின் பெருங்காயத்தையும், மஞ்சள் பொடியையும் போட்டு ஆற வைத்துள்ள சாதத்தில் கொட்டவும். உப்பு சேர்த்து, எலுமிச்சம்பழத்தையும் பிழிந்து நன்றாகக் கிளறிக் கலந்துக்கொள்ளவும். விருப்பினால் சிறிது கொத்தமல்லி இலையைப் பொடியாக நறுக்கிச் சாதத்தில் கலந்து வைக்கலாம்.
(குறிப்பு: எலுமிச்சம்பழத்தைநறுக்கியவுடன் தண்ணீரில் போட்டு கழுவிப் பிழிந்தால் கசப்பு இருக்காது. பழத்திலுள்ள ரசமும் நன்றாக வந்துவிடும்.)
Comments
Post a Comment