மில்க்மெய்ட் ஐஸ்கிரீம் II (Milkmaid Ice Cream)
தேவையான பொருட்கள்:
மில்க்மெய்ட் (Condensed Milk) - சிறிய டின் குளிர்ந்த பால் - 1 1/2 கப்
விப்ட் கிரீம் (Whipped Cream) - 1 1/2 கப்
வெனிலா எசென்ஸ் - 1 மேசைக்கரண்டி
செய்முறை :
குளிர்ந்த பால், வெனிலா எசென்ஸ், மில்க்மெய்ட் மூன்றையும் ஒன்றாக கலக்கவும். விப்ட் கிரீமை நன்றாக அடித்து, ஏற்கனவே கலக்கி வைத்துள்ள கலவையுடன் கலக்கவும். பின் இக்கலவையை குளிரூட்டியில் வைத்து பாதி இறுக விடவும். பாதி இறுகிய கலவையை எடுத்து நன்றாக மென்மை ஆகும்வரை அடிக்கவும். பின் மென்மையான இக்கலவையை குளிரூட்டியில் வைத்து இறுக விடவும். சுவையான மில்க்மெய்ட் ஐஸ்கிரீம் தயார்.

Comments
Post a Comment