நண்டு வறுவல் (Crab Roast)

நண்டு வறுவல் (Crab Roast)
    
    தேவையான பொருட்கள் :
    நண்டு - 6
    பூண்டு - 2 பெரியது 
    வெள்ளை கசகசா - 3 தேக்கரண்டி 
    மிளகு - 4 தேக்கரண்டி 
    உப்பு - தேவைக்கேற்ப
    தேங்காய் - பாதி 
    வெங்காயம் - 5 சின்னது 
    பச்சைமிளகாய் / காய்ந்தமிளகாய் - 100g 
    சோம்பு - 3 தேக்கரண்டி (கொஞ்சம் தாளிக்க மீதி மசாலா அரைக்க)
     சீரகம் - 2 தேக்கரண்டி 
     எண்ணெய் - தேவைக்கேற்ப

    செய்முறை :
    ஒரு தாச்சியில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி துருவிய தேங்காய், கசகசா, சீரகம், சோம்பு, மிளகு, காய்ந்தமிளகாய் ஆகியவற்றை பொன்னிறமாக வறுத்து கொள்ளவும். வறுத்த மசாலாவுடன் பூண்டு, மஞ்சள் சேர்த்து அரைத்து வைத்துக் கொள்ளவும். வெங்காயத்தை பொன்னிறமாக வறுத்துக் கொள்ளவும். அதில் சுத்தம் செய்த நண்டுகளை  சேர்த்து அவை நிறம் மாறும் வரை வதக்கவும். அரைத்த மசாலாவை இத்துடன் சேர்த்து குறைந்த வெப்பநிலையில் வறுக்கவும். நண்டு வறுவல் தயார்.
 

Comments