பருப்பு இடியப்பம் (Dhal String Hoppers)
தேவையான பொருட்கள்:
இடியாப்ப மா - 2 கப்
துவரம் பருப்பு - 1/2 கப்
தேங்காய் (துருவியது) - 1 மேசைக்கரண்டி
கடுகு - 1 தேக்கரண்டி
உளுந்து - 1 தேக்கரண்டி
செத்தல்மிளகாய் - 4
மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
உப்பு - சுவைக்குத்தக்கபடி
எண்ணெய் - 1 மேசைக்கரண்டி
கறிவேப்பிலை - சிறிதளவு
செய்முறை :
மாவை இடியாப்பங்களாக அவித்து, சிறிது சிறிதாக பிய்த்துக் கொள்ளவும். துவரம் பருப்பை மஞ்சள் தூள் சேர்த்து வேக வைத்துக்கொள்ளவும். எணெய்யை சூடாக்கி கடுகு, உளுந்து, செத்தல் மிளகாய் இட்டு தாளிக்கவும். பின்னர் வேகவைத்த துவரம் பருப்பு (தண்ணீருடன்)தேங்காய் துருவல், உப்பு, கறிவேப்பிலை சேர்க்கவும், இதை 20 நிமிடங்கள் கொதிக்க விட்டு, சிறிதளவில் பிய்த்தெடுத்து இடியப்பத்தின் மேல் ஊற்றி நன்கு கலந்து கொள்ளவும்.
Comments
Post a Comment