டோனட் (Donut)
தேவையான பொருட்கள்:
கோதுமை மா - 500g
சீனி - 100g
முட்டை - 1
பட்டர் - 3 மேசைக்கரண்டி
ஈஸ்ட் - 1 மேசைக்கரண்டி
வெனிலா எசென்ஸ் - சிறிதளவு
டின் பால் (condensed Milk) - 3 மேசைக்கரண்டி
ஐசிங் சுகர் - சிறிதளவு
எண்ணெய் - தேவையானளவு
உப்பு - 1 தேக்கரண்டி
இளம் சூடான நீர் - 1/2 கப்
செய்முறை:
கோதுமை மாவை சலித்து பின் ஈஸ்ட், உப்பு, வெனிலா எசென்ஸ் மூன்றையும் சேர்த்து கொள்ளுங்கள். பின் பட்டரை ஒரு பாத்திரத்தில் இட்டு அடுப்பில் வைத்து உருக்கி கொள்ளவும். சீனி, முட்டை, டின் பால் என்பவற்றை ஒன்றாக அடித்து, பின்பு மாவில் கலந்து , உருகிய பட்டர் உடன் சூடான நீரையும் சேர்த்து மாவை ரொட்டி பதத்தில் பிசைந்து கொள்ளவும். இக்கலவையை குறைந்தது 45 நிமிடம் ஈரமான வெள்ளைத்துணியால் மூடி பொங்கி வரும்வரை வைக்கவும். பின் சிறு உருண்டைகளாக எடுத்து உருட்டி டோனட் வடிவமைக்கவும், அல்லது அச்சு இருந்தால் அதன் மூலம் வெட்டிடவும். பின் எண்ணெய்யில் பொரித்தெடுத்து ஐசிங் சீனியில் பிரட்டி ஆறிய பின்பு பரிமாறலாம். தேவையானால் ஐசிங் சீனிக்கு பதிலாக சாக்லேட் கிரீமும் பயன்படுத்தலாம்.
Comments
Post a Comment