எனர்ஜி லட்டு (Energy Laddu)

எனர்ஜி லட்டு (Energy Laddu)
தேவையான பொருட்கள் :

விதை நீக்கிய பேரிச்சம்பழம் - 500g 

அதிகம் முற்றாத தேங்காய் - 300g 

முந்திரி - 250g 

உலர் திராட்சை (ப்ளம்ஸ்) - 100g 

சுக்குத்தூள் - 10g 

லீகுய்ட் குளுகோஸ் - 200g 

ஹோர்லிக்ஸ் /போர்ன்விட்டா - 100g 

பாதம் (துண்டுகளாக்கியது) - 50g 

வெல்லம் - 250g 

தேன் - 50ml 

நெய் - 250ml 

ஏலக்காய் - 5g 

செய்முறை :

வெல்லத்தை 3/4 லீற்றர் தண்ணீரில் காய்ச்சி வடிகட்டி கம்பி பதம் வருவதற்கு முன் இறக்கிவிடவும். பேரீச்சையை பொடியாக நறுக்கவும். தேங்காயைத் துருவவும். ஏலத்தை பொடியாக்கவும். முந்திரி, திராட்சை, பாதாமை நெய்யில் வறுக்கவும். காய்ச்சிய பாகில் பேரீச்சை, தேங்காய் துருவல் மற்றும் அனைத்துப்பொருட்களையும் ஒன்றாகச் சேர்த்து கலந்து சிறுசிறு உருண்டைகளாகப் பிடித்து வைத்தால், உடனே சுவைக்க எனர்ஜி லட்டு தயார். லீகுய்ட் குளுகோஸ் வேண்டாம் என்பவர்கள் அதற்குப் பதிலாக, அரைகிலோ சீனியில் ஒரு துளி எலுமிச்சைச்சாறு விட்டு பாகு காய்ச்சி கம்பிப்பதம் வரும் முன்னர் அதில் 200ml நெய் சேர்த்து உடனே இறக்கிப் பயன்படுத்தலாம். 

 

Comments