இறைச்சி போண்டா (Meat Bonda)
தேவையான பொருட்கள் :
இறைச்சி (ஏதுவாகவுமிருக்கலாம்) - 250g
எண்ணெய் - 200ml
கோதுமை மா - 100g
உருளைக்கிழங்கு - 200g
அரிசி மா - 100g
பெரிய வெங்காயம் - 3
பூண்டு - 1
செத்தல் மிளகாய் - 5
பச்சை மிளகாய் - 5
இஞ்சி - 2 துண்டு
கறிவேப்பிலை - தேவையானளவு
கடுகு - 1 தேக்கரண்டி
உப்பு - தேவைக்கேற்ப
செய்முறை :
இறைச்சியை கழுவிச் சிறுசிறு துண்டுகளாக வெட்டிக்கொள்ளுங்கள். பெரிய வெங்காயம், செத்தல் மிளகாய், பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு, கறிவேப்பிலை ஆகியவற்றை துடுகளாக நறுக்கிக் கொள்ளுங்கள். இறைச்சியையும், உருளைக்கிழங்கையும் தனித்தனியாக வேகா வைத்துக்கொள்ளவும். உருளைக்கிழங்கு வெந்ததும் தோல் நீக்கி மசித்துக்கொள்ளவும். தாச்சியை அடுப்பில் வைத்து எண்ணெய்விட்டு கடுகைத் தாளித்து, அத்துடன் துண்டுகளாக நறுக்கியவைகளை சேர்த்து வதக்கவும். பின் வெந்த இறைச்சி, மசித்த உருளைக்கிழங்கு, தேவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு கிளறி இறக்கி வைத்துக்கொள்ளுங்கள். கோதுமை மா, அரிசி மா, தேவைக்கேற்ப உப்பும், நீரும் சேர்த்து சற்று இறுக்கமாகக் கரைத்து 30 நிமிடங்கள் வைக்கவும். பின் இறைச்சி கலவையை உருண்டைகளாக்கி மாக்கலவையினுள் இட்டுப் புரட்டி பொரித்தெடுத்து பரிமாறவும்.
Comments
Post a Comment