உருளைக்கிழங்கு மசாலாக்கறி (Potato Masala Curry)
தேவையான பொருட்கள் :
உருளைக்கிழங்கு - 1/2kg
தக்காளி - 1/4kg
வெங்காயம் - 2
தேங்காய் துருவல் - 1/2 கப்
கொத்தமல்லி - 1 மேசைக்கரண்டி
சீரகம் - 1/2 தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் - 6 அல்லது 8
கருவாப்பட்டை - சிறு துண்டு
ஏலக்காய் - 4
கச்சான் - 1 மேசைக்கரண்டி
பொட்டுக்கடலை - 1 மேசைக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
பூண்டு - 4 பற்கள்
நெய் - 2 மேசைக்கரண்டி
இஞ்சி - பெரியதுண்டு
உப்பு - தேவையான அளவு
செய்முறை :
உருளைக்கிழங்கின் தோலைச் சீவி துண்டுகளாக நறுக்கி கொள்ளவும். தக்காளியை பொடியை நறுக்கி கொள்ளவும். வெங்காயம், தேங்காய் துருவல், காய்ந்த மிளகாய், கொத்தமல்லி, சீரகம் முதலியவற்றைத் தனித்தனியாக வறுத்து, அரைத்துக் கொள்ளவும். எண்ணெய்யில் வறுத்த பொட்டுக்கடலை, கச்சான், கருவாப்பட்டை, ஏலக்காய் எல்லாவற்றையும் அரைத்துக் கொள்ளவும்.
அரைத்த மசாலாக்களை ஒரு கோப்பை தண்ணீரில் கரைத்து வைத்திக்கொள்ளவும். இஞ்சி, பூண்டு இரண்டையும் தனியாக அரைத்துக்கொள்ளவும். நறுக்கிய உருளைக்கிழங்குத் துண்டுகளை 1கோப்பை தண்ணீரில் கொதிக்கவிடவும். மஞ்சள்தூள், அரைத்த இஞ்சி பூண்டு முழுவதையும் சேர்க்கவும். கிழங்கு பாதி வெந்தவுடன் உப்பும், கரைத்த மசாலாவையும் போட்டு 5 நிமிடம் வரை கொதிக்க விடவும். பின் நறுக்கிய தக்காளியை சேர்த்து கிளறி அடுப்பிலிருந்து இறக்கவும்.
Comments
Post a Comment