இறால் பஜ்ஜி (Prawn Baji)
தேவையான பொருட்கள் :இறால் - 1/2kg
மிளகாய்த்தூள் - 5 தேக்கரண்டி
எலுமிச்சை - 1
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
கடலை மா - 150g
அரிசி மா - 50g
மைதா மா - 2 தேக்கரண்டி
பஜ்ஜி கலர் - விரும்பினால் சேர்க்கலாம்
ஆப்ப சோடா - 2 சிட்டிகை
செய்முறை :
பெரிய இறால்களாகப் தெரிவு செய்து, சுத்தம் செய்து மஞ்சள்தூள், உப்பு சேர்த்து வேக வைத்து நீரை வடித்துவிடவும். 3 கரண்டி மிளகாய்த்தூள், எலுமிச்சம் பழசாறு கலந்து விட்டு எண்ணெய்யில் நன்கு வதக்கி இறக்கி ஆற வைக்கவும். ஒரு பாத்திரத்தில் கடலைமா, அரிசிமா, மைதாமா, 2 கரண்டி மிளகாய்த்தூள், நீர், உப்பு, பஜ்ஜி கலர் சேர்த்து பஜ்ஜி மாவுப் பதத்தில் கரைத்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய வைக்கவும், இறாலை பஜ்ஜி மாவில் தோய்த்து எண்ணெய்யில் பொரித்தெடுக்கவும்.

Comments
Post a Comment