எள் வடகம் (Sesame Snack)
தேவையான பொருட்கள்:
சவ்வரிசி - 1Kg
பச்சைமிளகாய் - 100g
பச்சையரிசி - 1கப்
வெள்ளை எள் - 50g
எலுமிச்சம் பழம் - 2
உப்பு - தேவையானளவு
செய்முறை :
பச்சையரிசியை இரண்டு மணி நேரம் ஊறவைத்த பிறகு, பச்சைமிளகாய், தேவையான உப்பு சேர்த்து நைசாக அரைத்து வைத்துக் கொள்ளவும். பிறகு சவ்வரிசியை சுத்தம் செய்து அகலமான பாத்திரத்தில் மூன்று லீட்டர் தண்ணீர் வைத்து கொதித்ததும், அவ்வரிசியுடன் அரைத்திருக்கும் அரிசி, மிளகாய் கலவையையும் போட்டு அடிபிடிக்காமல் கிளறி வெந்ததும், இறக்கி விட வேண்டும். பின்னர் எலுமிச்சை சாறு, எள் சேர்த்து பிளாஸ்டி ஷீட்டில் ஒவ்வொரு கரண்டியாக போட்டு வெயிலில் உலர்த்தவும். எள் மணத்துடன் வடகம் வித்தியாசமான சுவையுடன் இருக்கும்.
Comments
Post a Comment