சோயா பிரியாணி (Soya Biriyani)

சோயா பிரியாணி (Soya Biriyani)
தேவையான பொருட்கள் :
பாஸ்மதி அரிசி - 2 கப் 
சோயாமீட் - 15 துண்டுகள் 
பெரிய வெங்காயம்  - 3
தக்காளி - 3
பச்சைமிளகாய் - 1
இஞ்சி - 1 துண்டு 
பூண்டு - 5 பற்கள் 
புதினா இலை - 1/2கட்டு 
மல்லித்தழை - 1/4 கட்டு 
மிளகாய்த்தூள் - 1 தேக்கரண்டி 
தயிர் (சற்று புளிப்பானது) - 1/4 கப் 
தேசிக்காய் - 1 பாதி 
கறுவாப்பட்டை -2
ஏலக்காய் - 2
நெய் - 1 மேசைக்கரண்டி 
எண்ணெய் - 3 மேசைக்கரண்டி 
உப்பு - தேவையானளவு 

செய்முறை :
அரிசியை நன்கு கழுவி ஒன்றுக்கு ஒன்றரை என்ற அளவில் தண்ணீர் சேர்த்து ஊற வைக்கவும். சோயாவை கொதிக்கும் நீரில் 10 நிமிடம் போட்டு எடுத்து, குளிர்ந்த நீரில் 2 முறை அலசி எடுக்கவும். வெங்காயம், தக்காளியை நீளவாக்கில் நறுக்கவும். மிளகாயை நறுக்கிக்கொள்ளவும். இஞ்சி, பூண்டு இரண்டையும் அரைத்துக்கொள்ளவும். ரைஸ் குக்கரில் நெய், எண்ணெய் போட்டு சூடாக்கி கறுவாப்பட்டை, ஏலக்காய், அரைத்த இஞ்சி பூண்டு, வெங்காயம், சுவைக்கேட்ப உப்பு சேர்த்து நன்கு தாளித்துக் கொள்ளவும். பின் தக்காளி, பச்சைமிளகாய், மிளகாய்த்தூள், சோயாமீட்  சேர்த்து வதக்கி, தயிர், தேசிக்காய்ச்சாறு சேர்க்கவும். தயிர் நன்கு கொதித்ததும் ஊற வைத்த அரிசியை தண்ணீருடன் சேர்க்கவும். மீண்டும் தேவையானளவு உப்பு சேர்த்து மூடிக் கொதிக்க விடவும். ஒரு விசில் வந்ததும் நெருப்பின் அளவைச் சற்று குறைத்து 10 நிமிடங்கள் வரை வைத்துவிட்டு இறக்கி கொத்தமல்லி தழை, புதினா இலை தூவி கிளறி விட்டு பரிமாறவும். 

 

Comments