மாங்காய் ஊறுகாய் (Mango Pickle)

மாங்காய் ஊறுகாய் (Mango Pickle)
தேவையான பொருட்கள்:
மாங்காய்த் துண்டுகள் - 10 டம்ளர் 
உப்பு - 1 டம்ளர் 
மிளகாய்ப்பொடி  - 1 1/2 டம்ளர் 
நல்லெண்ணெய்  - 1 டம்ளர் 
பெருங்காயம் - 2 கொட்டைப்பாக்கு அளவு 
வெந்தயம் - 2 தேக்கரண்டி 
கடுகு - 6 தேக்கரண்டி 
மஞ்சள் போடி - 2 தேக்கரண்டி 
வெல்லம் - 1/4 டம்ளர் 

செய்முறை:
முதலில் மாங்காய்களைச் சிறுசிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும். அதில் உப்பு போட்டு நன்றாக குலுக்கி மூடிவைக்கவும். மறுநாள் நன்றாக தண்ணீர் விட்டிருக்கும். மாங்காய்த் துண்டுகளை மட்டும் நன்றாக வடிய வைத்து ஓலைப்பாயில் போட்டு வெயிலில் வைக்கவும். வடித்த நீரை தனியாக எடுத்து வைக்கவும். மாங்காய்கள் ஈரம் இல்லாமல் காய்ந்த பிறகு மலையில் வாணலியில் நல்லெண்ணெய்  இட்டு கடுகு தளித்துக் கொண்டு, வடித்து வைத்த மாங்காய் நீரை விட்டு கொதிக்க வைக்கவும். தண்ணீர் பாதி ஆனவுடன் மிளகாய்ப்பொடி,மஞ்சள் பொடி, வெல்லம் முதலியவைகளைப் போட்டு கலக்கவும். வெயிலில் காயவைத்த மாங்காய்த்துண்டுகளின் மேல் இக்கலவையை  ஊற்ற வேண்டும். வெந்தயம், பெருங்காயம் இரண்டையும் வறுத்துப் பொடி செய்து, அதையும் மாங்காயில் போட்டு கிளறவும். நன்றாக சூடாறிய பின் மூடிவைக்கவும். இதை இரண்டு நாட்களுக்கு ஒரு தரம் நன்றாக கரண்டியால் கலந்துவிட வேண்டும்.


 

Comments