ரசப்பொடி (Rasam Powder)

ரசப்பொடி (Rasam Powder)
தேவையான பொருட்கள்:
துவரம் பருப்பு - 1 மேசைக்கரண்டி 
செத்தல் மிளகாய் - 10
கொத்தமல்லி - 3/4 மேசைக்கரண்டி
மிளகு - 1 மேசைக்கரண்டி
சீரகம் - 1 மேசைக்கரண்டி
வெந்தயம் - 1 தேக்கரண்டி 
கடுகு - 1 தேக்கரண்டி
கறிவேப்பில்லை - சிறிதளவு 
மஞ்சள் தூள் - 1 தேக்கரண்டி
பெருங்காயத்தூள் - 1 தேக்கரண்டி

செய்முறை:
துவரம்பருப்பை நன்கு வாசனை வரும் வரை வறுக்கவும். அத்துடன் மிளகு, சீரகம், வெந்தயம், ஆகியவற்றை சேர்த்து வறுக்கவும். மிளகாய், கொத்தமல்லியை வேறாக வறுத்து வைக்கவும். பின்னர் கடுகு, கறிவேப்பிலையை வேறாக வறுத்து வைக்கவும். வறுத்த அனைத்தையும் சூடு தணிய ஆறவிடவும். மஞ்சள் தூள், பெருங்காயத்தூள் கலந்து, அனைத்தையும் கலந்து நன்கு அரைத்து பொடி செய்து காற்று புகாத பேணியில் இட்டு வைக்கவும்.

 

Comments