தக்காளி ஊறுகாய் (Tomato Pickle)

தக்காளி ஊறுகாய் (Tomato Pickle)
தேவையான பொருட்கள்:
தக்காளி - 1/2kg 
கருவாப்பட்டை - 30
நல்லெண்ணெய் - 150ml 
பூண்டு - 100g 
வறுத்து பொடித்த வெந்தயப்பொடி - 1/2 தேக்கரண்டி 
பெருங்காயத்தூள் - 2 தேக்கரண்டி
உப்பு - தேவையானளவு 
கறிவேப்பிலை - 4 கொத்து 
கடுகு - 1 தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி

செய்முறை :
தக்காளியை சிறு துண்டுகளாக நறுக்கி வைக்கவும். பூண்டை தோல் நீக்கி பொடியாக நறுக்கி வைக்கவும். தக்காளியை வேக வைத்து, ஆறியதும் கருவாப்பட்டை சேர்த்து விழுதாக அரைக்கவும். அடுப்பில் வாணலியை வைத்து நல்லெண்ணெய்ஊற்றி சூடானதும் கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை இட்டு தாளித்து, நறுக்கிய பூண்டை சேர்த்து நன்றாக வதக்கவும். பின் வதக்கியவற்றுடன் அரைத்த தக்காளி விழுது, உப்பு சேர்த்து கொதிக்கவிடவும். அதில் வெந்தயப்பொடி மற்றும் பெருங்காயத்தூள் சேர்த்து அடிப்பிடிக்காமல் நன்றாக வதக்கவும். கலவை நன்கு சுருண்டு அல்வா பதத்திற்கு வரும் வரை வதக்கி, எண்ணெய் பிரிந்து மேலே வந்ததும் இறக்கவும். சுவையான தக்காளி ஊறுகாய் தயார். இட்லி,தோசை, சப்பாத்தி, சாதத்திற்கு  சேர்த்து உண்ண பொருத்தமானது.


 

Comments